நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில்
வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வேதாரணியம் காவல் துறையினரால் நடத்தப்பட்டது.
விழாவிற்கு பள்ளி பொறுப்பு த்தலைமை ஆசிரியர் சு.எழிலரசன் தலைமையேற்றார்.
ஆசிரியர் கோ.ஆதவன் வரவேற்றார் .ஆசிரியர் சி. நாகராஜன் போதைப் பொருள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்துப்பேசினார்.


காவல்துறை உதவி ஆய்வாளர் இங்கர்சால் போதைப் பொருளால் குடும்பத்திலும் சமூகத்திலும் ஏற்படும் சீரழிவுகள் குறித்தும் மாணவர்களை எவ்வாறு போதைப் பொருள்கள் அழிவு பாதைக்கு அழைத்துச் சென்றுஅவர்களை வாழ்வில் தடம் மாற வைக்கிறது என்பது குறித்தும் உதாரணங்களுடன்எடுத்துரைத்தார் .ஆசிரியர் கோ.கார்த்திகேயன் நன்றி கூறினார்.

