நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய நலத்திட்ட உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழாவில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் வழங்கினார்.
நாகப்பட்டினம் நவம்பர் 6
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய நலத்திட்ட உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழாவில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் வழங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ. மதிவாணன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.இவ்விழாவில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது. மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் உடலுழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, 17.03.1999 அன்று தமிழ்நாடு உடலுழைப்பு தெரிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டது.



2006 முதல் 2011 வரை ஆட்டோ ஓட்டுநர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், நடைபாதை வியாபாரிகள், சலவை தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் 15 வகையான தனி நலவாரியங்களை அமைத்து சிறப்பாக செயல்பட்டு வந்தது. அமைப்புசாரா தொழிலாளர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாக 01.11.2008 முதல் மாவட்டங்கள் தோறும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகங்கள் ஆரம்பிக்கப்பட்டு அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பதிவு மற்றும் புதுப்பித்தலின் போது வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் 01.09.2006 அன்று முதல் முத்தமிழ் அறிஞரால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
மேலும், அமைப்புசாரா தொழிலாளர்கள் எளிய முறையில் பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஏதுவாக 15.09.2009 முதல் கணினி மயமாக்கப்பட்டது. இவ்வாறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியதன் மூலம், இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
இவ்வாறாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியைப் பின்பற்றி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற 50 நாட்களில் தமிழகம் முழுவதும் தொழிலாளர் நல வாரியத்தில் நிலுவையில் இருந்த 50,000 விண்ணப்பங்கள் சரிபார்த்து, இதில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என்ற இலக்கின் அடிப்படையில் முதற்கட்டமாக ரூ.10.69 கோடி தொகைக்கான நலத்திட்ட உதவிகளை சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 30.07.2021 அன்று வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.இரண்டாவது கட்டமாக தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்த்தல் தொடர்பான தொழில் மற்றும் வணிக வாகனங்களில் பணிபுரியம் தொழிலாளர்கள் பயனடைவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அமைப்புசாரா ஒட்டுநர்கள் நல வாரியம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு அமைப்புசாரா ஒட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம் என பெயர் மாற்றம் செய்து அரசானை வெளியிடப்பட்டுள்ளது.மேலும், உணவகம், தேநீர் கடைகள், பேக்கிரி மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, தமிழ்நாடு சமையல் தொழிலாளர்கள் நல வாரியம் என்பதை தமிழ்நாடு சமையல் மற்றும் உணவகத் தொழிலாளர்கள் நல வாரியம் என பெயர் மாற்றம் செய்து அரசானை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், கட்டுமானத் தொழிலாளர்களின் 11-ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு மற்றும் தேர்ச்சி பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவித்தொகை ஆகியவை ஆண்டிற்கு உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் ஒட்டுநர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையான, முறையான பட்டப்படிப்பு படிப்பதற்கு மற்றும் பட்;டப்படிப்பினை விடுதியில் தங்கி படிப்பதற்கு ஆகியவை ஆண்டிற்கு உயர்த்தியும், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் இயற்கை மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இயற்கை மரண உதவி உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.மேலும், தமிழ்நாடு உடலுழைப்பு நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் இயற்கை மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இயற்கை மரண உதவி உயர்த்தியும், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் விபத்து மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விபத்து மரண உதவித்தொகைஉயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது, 3வது கட்டமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 01.12.2021 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் 50,721 தொழிலாளர்களுக்கு ரூ.12,35,20,950தொகைக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதல் கட்டமாக பதிவு பெற்ற 550 தொழிலாளர்களுக்கு மாதந்திர ஓய்வூதியமாக ரூ.5,50,000 320 தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.5,92,000- 25 தொழிலாளர்களுக்கு இயற்கை மரண உதவித்தொகையாக ரூ.6,25,000 04 தொழிலாளர்களுக்கு விபத்து ஊனம் உதவித்தொகையாக ரூ.1,40,000 மற்றும் 01 தொழிலாளர்களுக்கு விபத்து மரணம் உதவித்தொகையாக ரூ.1,02,000- என மொத்தம் 900 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவித்தொகையாக ரூ.20,09,000- வழங்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக பதிவு பெற்ற 118 தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,17,500-, 820 தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.15,26,500- 46 தொழிலாளர்களுக்கு இயற்கை மரண உதவித்தொகையாக ரூ.11,34,000-இ 11 தொழிலாளர்களுக்கு திருமணம் உதவித்தொகையாக ரூ.43,000- மற்றும் 05 தொழிலாளர்களுக்கு விபத்து மரணம் உதவித்தொகையாக ரூ.5,10,000 என மொத்தம் 1000 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவித்தொகையாக ரூ.33,31,000 வழங்கப்பட்டுள்ளது. மேலும் 916 உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரண உதவித்தொகை ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.5,000 வீதம் மொத்தமாக ரூ.45,80,000- உதவித்தொகையாக வழங்கப்பட்டது.
பணியிடத்தில் விபத்து மரணம் அடைந்த பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5,00,000 வழங்கப்படுகிறது. இவ்வலுவலகத்தின் மூலம் 08 பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.40,00,000 வழங்கப்பட்டது.
மேலும் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022-2023 நிதியாண்டில் பதிவு பெற்ற 4105 தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,99,57,000 3618 தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.72,67,650 116 தொழிலாளர்களுக்கு இயற்கை மரண உதவித்தொகையாக ரூ.38,62,000- 07 தொழிலாளர்களுக்கு திருமணம் உதவித்தொகையாக ரூ.25,000 மற்றும் 07 தொழிலாளர்களுக்கு விபத்து மரணம் உதவித்தொகையாக ரூ.7,14,000 என மொத்தம் 8777 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவித்தொகையாக ரூ.4,04,05,650 வழங்கப்பட்டுள்ளது என மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஊராட்சித்தலைவா ச.உமாமகேஸ்வரி திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் க.ஜெயபாலன் மயிலாடுதுறை தொழிலாளர் உதவி ஆணையர் எம். ஞானப்பிரகாசம் நாகப்பட்டினம் தொழிலாளர் உதவி ஆணையர் எம்.ஸ்ரீதர் தொழிற்சங்கப்பிரநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டார்கள்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

