நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
நாகப்பட்டினம் நவம்பர் 4 நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
திருமருகல் ஊராட்சி ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.86 இலட்சம் மதிப்பீட்டில் கட்டட பழுது நீக்கம் செய்யும் பணி மற்றும் சமையல் கூடத்தில் ரூ.33000 மதிப்பீட்டில் கட்டட பழுது நீக்கம் செய்யும் பணிகளையும், சென்னமங்கலம் முதல் தெருவில் 15 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெறுவதையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் கட்டுமான பணிகளையும், திருமருகல் ஊராட்சியில் 15 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுமான பணிகளையும் மற்றும் சந்தைபேட்டையில் ரூ.9.10 இலட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் பாதையை தூர்வாரும் பணிகள் நடைபெறுவதையும், பண்டாரவாடை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுமான பணிகளையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் கட்டுமான பணிகளையும், மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.59 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக் கட்டடம் கட்டும் கட்டுமான பணிகளையும், திருக்கண்ணபுரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழலகம் கட்டும் கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


முன்னதாக பனங்குடி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் புனரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் என்.பசுபதி திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆரோக்கிய பாத்திமா மேரி, எஸ்.பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

