நாகப்பட்டினம் நவம்பர் 4 நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் ஆவின் நிறுவனத்தின் புதிய குளிர்விப்பான் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் கீழ்வேளுர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் உடன் உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது .கீழையூர் ஊராட்சி ஒன்றிய பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தஞ்சாவூர் மண்டல பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின்; மூலம் சுமார் 5000 லிட்டர் கொள்திறன் கொண்ட ஒரு மொத்த பால் குளிர்விப்பான் மையத்தினை திட்டத்தில் சுமார் 25 லட்சம் மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ளது,


இதில் நம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம், நாகப்பட்டினம், திருக்குவளை, கீழ்வேளுர் ஆகிய வட்டத்தில் கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்யப்பட்டு தஞ்சாவூர் மண்டல பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்திற்கு அனுப்பப்படும். மேலும் தற்போது 24 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வேளாங்கண்ணி தலைஞாயிறு திருக்குவளை ஆகிய மூன்று தடங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நம் மாவட்டத்தில் புதிதாக சங்கங்கள் துவங்கப்பட உள்ளதால் எதிர்காலத்தில் இப்பகுதியை சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் ஊன்றுகோலாக அமையும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வேளாங்கண்ணி பேரூராட்சி துணை தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், ஆவின் நிறுவன மண்டல மேலாளர் இரவி, துணைப்பதிவாளர் பால்வளம் விஜயலெட்சுமி, பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு, பிரதாபராமபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் தமிழ்மணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

