நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் நவம்பர் 3
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் கோவில்பத்து ஊராட்சி வடக்கு தெருவில் உள்ள பிரப்பாங்கண்ணி குளத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.75 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் மற்றும் படித்துறை கட்டும் பணிகளையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டட பழுது நீக்கம் செய்யும் பணிகளையும், கோவில்பத்து ஊராட்சி தெற்கு தெருவில் ரூ.6.38 இலட்சம் மதிப்பீட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டதின் கீழ் சிமெண்ட் சாலை மற்றும் வெள்ளப்பள்ளம் ஊராட்சி மன்மதன்கோவில் தெருவில் 15 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.3.95 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியையும், வெள்ளப்பள்ளம் ஊராட்சி மற்றும் கோவில்பத்து ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் கட்டுமான பணிகளையும், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.




தொடர்ந்து, நாலுவேதபதி ஊராட்சியில் 15 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.6.80 இலட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கும் பணியையும், மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.67 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, புதியதாக கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி சேவை மையக் கட்டடம் மற்றும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் , பழங்கள்ளிமேடு ஊராட்சியில் உள்ள திருவாசல் குளத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் படித்துறை அமைக்கும் பணிகளையும், நாலுவேதபதி ஊராட்சி அரசினர் உயர்நிலைப் பள்ளி மற்றும் கள்ளிமேடு ஊராட்சியில் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சைக்கிள் நிறுத்தம் அமைக்கும் கட்டுமான பணிகளையும், மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.56 இலட்சம் மதிப்பீட்டில் கள்ளிமேடு ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், துளசாபுரம் ஊராட்சியில் புதிய நியாயவிலைக் கட்டடம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டட கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.ஜி.தமிழரசி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் என்.பசுபதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி
டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

