நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினத்தில் உள்ள பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதுமைப் பெண் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் நவ 02
நாகப்பட்டினத்தில் உள்ள பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதுமைப் பெண் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் இந்த புதுமைப் பெண் திட்டம் செயல்படுகிறது மேல்படிப்பு, தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும் விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தின் கீழ் 2,3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள் முதற்கட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவிகள் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் கனரா வங்கி ஆகிய வங்கிகளில் மட்டுமே சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக வங்கி கணக்கை, ஆதார் எண் மற்றும் கைபேசி எண்ணுடன் கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 18-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக மாற்று சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் மற்றும் குறைகள் ஏதும் இருப்பின் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அ. அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி கல்லூரி முதல்வர் பி.ராஜாராமன் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் க.செந்தில்குமார், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி
டிவிக்காக நாகை மாவட்ட
செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

