தூத்துக்குடி மாவட்ட கியூப் பிரிவு குற்றப்புலனாய்வு துறை ஆய்வாளர் திருமதி விஜயஅனிதா அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ், சுரேஷ்குமார், சுரேஷ்,கந்தசாமி தலைமை காவலர்கள் ராமர், பாலகிருஷ்ணன், கோவிந்தராஜ், முதல் நிலை காவலர்கள் இருதயராஜ், பழனி பாலமுருகன் ஆகியோர் 23.10.2022ஆம் தேதி ,22.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வீரபாண்டியபட்டிணம் ஜீவா நகர் கடற்கரை அருகே நின்று கொண்டிருந்த IND TN 12 MO 4364 என்ற பதிவெண் கொண்ட, அந்தோணியார் துணை, டிவான்சியாவாஸ் என எழுதப்பட்ட வள்ளத்தினை சோதனை செய்ய முயன்றனர்.

அப்போது, அதிலிருந்து தப்பி ஓட முயன்ற நபர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில், அவர்கள் 1)பிரபு (41/22) த.பெ. ரவீந்திரன், இந்திரா நகர், முருகன் தியேட்டர் அருகில், தூத்துக்குடி 2) ஜெயக்குமார் (32/22),த.பெ டேவிஸ், அலங்கார தட்டு, ஆரோக்கியபுரம், தூத்துக்குடி, 3) இரட்சகர் (36/22)த.பெ அந்தோணி சிலுவை, இந்திரா நகர், தாளமுத்து நகர், தூத்துக்குடி 4) ரஞ்சித்(42/22)த.பெ. மனுவேல்,281/82 மாதவ நாயர் காலனி, திரேஸ்புரம், தூத்துக்குடி, ஆகியோரை பிடித்தும், வள்ளத்தினை சோதனை செய்ததில், ஒரு பீடிஇலை பண்டல் சுமார் 35.00 கிலோ எடைவீதம், சுமார் 1400 கிலோகிராம் எடை கொண்ட, 41 பீடிஇலை பண்டல்கள் இருந்தது. பின்னர் மேற்படி பீடிஇலை பண்டல்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய5) மெல்வர்(30/22),த.பெ. பெலிக்ஸ்,
252, சிலுவையார் கோவில் தெரு, திரேஸ்புரம், தூத்துக்குடி என்பவருக்கு சொந்தமான வள்ளம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

