தூத்துக்குடி மாநகராட்;சி பகுதிகளில் கனிமொழி எம்.பி ஆய்வு நம்ம தூத்துக்குடி செல்பி பாயிண்ட் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்படுள்ள மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் கூட்டத்து மாடசாமி கோவில் ரஹ்மத்நகர், எழில்நகர், பிரையண்ட்நகர், முத்துகிருஷ்ணாநகர், முருகேசன்நகர், திரவியரத்தினம் நகர், குறிஞ்சிநகர், அம்பேத்கார்நகர், உள்ளிட்ட பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு ஜெயராஜ் ரோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நம்ம தூத்துக்குடி செல்பி பாயிண்டை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், ஆணையர் சாருஸ்ரீ, மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ,
துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி பொறியாளர் அசோகன், உதவி பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், உதவி ஆணையர்கள் தனசிங், சேகர், காந்திமதி, ராமசந்திரன், நகர் நல அலுவலர் அருண்குமார், மாநகராட்சி மண்டலதலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, தாசில்தார் செல்வகுமார்,
பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், சிவக்குமார், இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, கண்ணன், ரெங்கசாமி, சுப்புலட்சுமி, ஜாக்குலின் ஜெயா, நாகேஸ்வரி, வட்டச்செயலாளர்கள் கார்த்திகேயன், தெய்வேந்திரன், செல்வராஜ், சதிஷ்குமார், பவாணி மார்ஷல், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், செல்வகுமார், நிர்வாகிகள் ராமர், பிரபாகர், பேச்சிமுத்து, செல்வம், ஜோஸ்பர், குமார், பொன்ராஜ், குலாம் ஆயிஷா, மணி, அல்பட், மற்றும் லிங்கராஜா, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகத்தில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பான மாநகர அளவிலான ஆலோசனை கூட்டம் மழைகாலங்களில் எடுக்க வேண்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து கனிமொழி எம்.பி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கனிமொழி எம்.பி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் ஸ்மாட்சிட்டி மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மழை காலத்திற்குள் அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும். என்ற அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணி 60 சதவீதம் நிறைவடைந்ததுள்ளது. எதிர்பாரத வகையில் மழை பெய்தாலும் அதை சமாளித்து மழை தண்ணீர் தேங்காத வகையில் தேங்கிய நீரை அப்புறப்படுத்தும் வகையில் மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்படும் விரைவாக அனைத்து பணிகளும் செய்து முடிக்க பணிகள் நடைபெற்ற வருகின்றது.

