தூத்துக்குடி. அக். 15.
தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அளித்துள்ள அறிக்கையில் மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஏய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கலங்களான உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்றும், ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்தி வழி கல்வியே கற்பிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியில் மட்டும் தேர்வு நடத்தும் பரிந்துரையும் உள்ளது.
இதனை எதிர்த்து தி.மு.க. இளைஞர் அணி – மாணவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.
மாநில இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரமான உதயநிதி ஸ்டாலின், மாநில மாணவரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் தலைமையில் இந்தி திணிப்பை கண்டித்து சென்னையிலும் மாபெரும் ஆர்ப்பட்டம் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாணவரணி அமைப்பாளர், அருண்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை கண்டித்து கோஷங்கள், பதாகைகள் ஏந்தி மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான டேவிட் செல்வின், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் ஜெயராஜ், கண்டன உரையெழுப்பி பேசினார்கள்.
இறுதியாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பேசுகையில்: முதலமைச்சரின் ஆணைக்கிணங்க இந்தி மொழி திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. இந்த இந்தி திணிப்பால், தமிழகத்தில் வேலைவாய்ப்பு, தொழில்வளம் பாதிக்கப்படும். இதனால், முதலமைச்சர் ஸ்டாலின் முதலாவதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கல்லூரி நுழைவுத்தேர்வு என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களை முடக்கும் நிலையை உருவாக்குகின்றனர். எழுத்தறிவு, படிப்பறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் கண்டிக்கத்தக்கது.
1965-ல் இதே போல் இந்தி திணிப்பு நடைபெற்ற போது கலைஞர் எதிர்த்து போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும், முதல் எதிர்ப்பு குரலை பதிவு செய்வது தமிழக முதல்வரின் கொள்கையாக உள்ளது.
பாஜக அரசு ஜாதி, மத வெறியை தூண்டும் வகையில் செயல்படுகிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில் இந்த போராட்டம் உங்களை விரட்டும் வகையில் 2024-ல் நடைபெறும் தேர்தலில் தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி முடிவு கட்டும் தேர்தலாக அமையும். மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்று திமுக போராடுகிறது, என்று பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அருணாச்சலம், துணைச் செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஆறுமுக பெருமாள், ஒன்றிய செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார், ஜெயக்கொடி, சுப்பிரமணி, ஜோசப், சுரேஷ் காந்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அம்பா சங்கர், அனக்ஸ், மாணவரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம், ஆத்தூர் பேரூராட்சி செயலாளர் முருகானந்தம், பேரூராட்சி மன்ற தலைவர் கமாலுதீன், ஆவீன் சேர்மன் சுரேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர் மணி, மாடசாமி, தெற்கு மாவட்ட அணி அமைப்பாளர்கள் வீரபாகு, ராஜேந்திரன், ரவி என்ற பொன்பாண்டி, ஆஸ்கர், துணை அமைப்பாளர்கள் ரெங்கசாமி, கணேசன், ரகுராமன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பால்ராஜ், மாவட்ட கவுன்சிலர்கள் பிரம்மசக்தி, ஜெஸிபொன்ராணி, மாவட்ட பிரதிநிதிகள் சப்பாணி முத்து, நெல்சன், நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், தொம்மை சேவியர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, ஒன்றிய துணை செயலாளர்கள் ராமச்சந்திரன், ஹரி பாலகிருஷ்ணன், பகுதி செயலாளர் சிவக்குமார், குமாரகிரி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முப்பிலியன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் பொன்னுச்சாமி, கபடி கந்தன், வக்கீல் கிருபாகரன் உட்பட சுமார் 2 ஆயிரம் பேர் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு எம் கண்ணன்
போலீஸ் செய்தி நியூஸ்

