• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 250 கர்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா:  எம்எல்ஏ சண்முகையா, பஞ். தலைவர் சரவணகுமார் பங்கேற்பு!!!

policeseithitv by policeseithitv
October 14, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 250 கர்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா:   எம்எல்ஏ சண்முகையா, பஞ். தலைவர் சரவணகுமார் பங்கேற்பு!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 250 கர்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா:

எம்எல்ஏ சண்முகையா, பஞ். தலைவர் சரவணகுமார் பங்கேற்பு!!!

 

தூத்துக்குடி,அக்,14

 

தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 250 கர்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் தூத்துக்குடி ஊரகம் சார்பில் மாப்பிள்ளையூரணி பத்திரகாளியம்மன் கலையரங்களில் வைத்து நடைபெற்றது. ஊட்டச்சத்து மாத சமுதாய வளைகாப்பு விழாவிற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் தலைமை வகித்தார்.

குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஊரக அலுவலர் திலகா வரவேற்புரையாற்றினார். மாவட்ட திட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்;ச்சி திட்ட பணிகள் அலுவலர் சரஸ்வதி திட்ட விளக்கவுரையாற்றினார்.

 

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா

குத்துவிளக்கேற்றி

பேசுகையில்: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுபடி தமிழகம் முழுவதும் சமுதாய வளைகாப்பு விழா நடைபெறுகிறது. கர்பிணி பெண்கள் கற்பம் தறித்த நாள் முதல் காய்கறி, மீன், முட்டை உள்ளிட்ட சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாக சந்தோஷமாக இருக்க வேண்டும். 6 மாதம் ஆன பின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு செவித்திறன் கேட்கும் தன்மை இருக்கும் காலகட்டத்தில் பெண்களுக்கு வளைகாப்பு என்ற நிகழ்ச்சி நடத்தி வளையல் அணிவிக்கப்படுகிறது. அந்த வளையலின் மூலம் ஜில், ஜில் என்ற சத்தம் வயிற்றில் வளரும் குழந்தை செவித்திறன் மூலம் மகிழ்ச்சியாக வளரும். அந்த காலகட்டத்தில் நீங்கள் நம்முடைய குழந்தைகள் ஐஏஎஸ், ஐபிஎஸ், டாக்டர், பொறியாளர் உள்ளிட்ட ஏதோவொரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்வதுடன் அந்த குழந்தையும் அதைநோக்கி செல்லும். நல்ல ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளையும் உட்கொண்டு ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாப்பதுடன் குழந்தை பெற்ற பின் 6 மாத காலம் வரை அதற்கு தாய்ப்பாலை தவிர வேறு எதுவும் கொடுக்கக் கூடாது. காரணம் குழந்தைக்கு உணவாகவும் மருந்தாகவும், தாய்ப்பால் இருந்து வருகிறது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதுபோன்ற சமுதாய வளைகாப்பு விழா மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி கர்பிணி பெண்களுக்கு ரூ.18,000,அரசு வழங்கி வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பெண்கள் நலன்தான் முக்கியம் என்று கருதி இந்த அரசு நகர்புறத்தில் உள்ள பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம், உள்ளாட்சியில் 50 சதவீதம் இடஒதுக்கீடு, கலைஞர் ஆட்சியில் மகளிர் உதவிக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு 12 லட்சம் கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடைந்து நம்பர் 1 மாநிலம் தமிழகம் என்ற நிலை உருவாகியுள்ளது.

முதலமைச்சர் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நாட்டு மக்களுக்காக உழைக்கிறார்;. இந்த அரசுக்கு நீங்கள் அனைவரும் துணையாக இருக்க வேண்டும். உங்களுக்கு துணையாக நாங்கள் இருப்போம். இந்த நாட்டின் கண்களாக இருப்பவர்கள் பெண்கள் தான். காரணம் நான் உட்பட பலர் காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு விட்டால் இரவு 10 மணிக்குத்தான் வந்த சேர்வோம். அதுவரை குடும்பத்தையும், குழந்தைகளையும் பேணி பாதுகாக்கின்ற பொறுப்பு உங்களிடம் தான் உள்ளது. உங்களின் சேவை இந்த நாட்டிற்கு தேவை என்று பேசிய பின்னர் 250 பெண்களுக்கு பல்வேறு சீர்வரிசைகளுடன் கூடிய பொருட்களை சண்முகையா எம்எல்ஏ வழங்கினார்.

விழாவில் தாசில்தார் செல்வக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், வட்டார வளர்ச்சி ஊரக அலுவலர் ராமராஜ், மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் கார்த்திக், ஆய்வாளர் வில்சன், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், பாரதிராஜா, தங்க மாரிமுத்து, சேசு, வட்டாரவளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, பொறியாளர் தளவாய், கிராம நிர்வாக அலுவலர் அமலநாதன், மாப்பிள்ளையூரணி ஊர் தலைவர் ராமமூர்த்தி, தர்மகர்த்தா பெரியசாமி, அம்பலத்தார் ராமசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் கௌதம் உட்பட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். கற்பிணி தார்மார்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. மேற்பார்வையாளர் செல்வி நன்றியுரையாற்றினார்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, போக்குவரத்துத்துறை சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

Next Post

தமிழக முதல்வரின் உன்னத திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் அரசு அதிகாரிகள் – தூத்துக்குடி பெண்கள் குமுறல் -சமூக நலத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் சாட்டையை சுழற்றுவார்களா?!!

Next Post
தமிழக முதல்வரின் உன்னத திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் அரசு அதிகாரிகள் – தூத்துக்குடி பெண்கள் குமுறல் -சமூக நலத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் சாட்டையை சுழற்றுவார்களா?!!

தமிழக முதல்வரின் உன்னத திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் அரசு அதிகாரிகள் - தூத்துக்குடி பெண்கள் குமுறல் -சமூக நலத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் சாட்டையை சுழற்றுவார்களா?!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In