மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வந்த ராக்கெட் ராஜாவை கைது செய்த நெல்லை போலீசார்: ராக்கெட் ராஜா கைது பின்னணி என்ன? பரபரப்பு தகவல்!!
திருநெல்வேலி, அக்,8
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த மஞ்சங்குளம் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை (26) என்பவர் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் திருநெல்வேலி போலீசார் கைது செய்தனர். இவர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மும்பையில் இருந்து விமானம் மூலம் ராக்கெட் ராஜா திருவனந்தபுரம் வருவதை அறிந்த காவல் துறையினர் விமான நிலையத்தில் வைத்தே அவரை அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமாரி,திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வரும் ராக்கெட் ராஜா அவர் சார்ந்த சமூக மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு ரியல் ஹீரோவாக இருந்து வருகிறார். ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்ட தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் திருவனந்தபுரத்திலிருந்து நாங்குநேரிக்கு விசாரணைக்காக அழைத்து வரப்படும் ராக்கெட் ராஜா பலத்த பாதுகாப்போடு கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்
வரை போலீசார் தீவிர பாதுகாப்பில் ராஜா இருப்பதாகவும் முழுமையான பாதுகாப்பு கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. ராக்கெட் ராஜா தமிழகத்தில் இருப்பதைவிட மும்பையில் தான் தற்போது அதிக நாள் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மும்பையிலிருந்து திருவனந்தபுரம் ராக்கெட் ராஜா ஏன் வந்தார் ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். அதே நேரத்தில் திருவனந்தபுரம் ராக்கெட் ராஜா வருவது காவல்துறைக்கு தெரியவந்துள்ளது ராக்கெட் ராஜா கைது தென் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

