நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கீழையூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பாக நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவினை கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ், இன்று தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் அக்டோபர் 7 நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கீழையூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பாக சுமார் 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவினை கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ், இன்று தொடங்கி வைத்தார்.
இவ்விழாவினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது .ஒரு குழந்தை வளர்ச்சி, கரு உருவான நாளில் இருந்தே ஆரம்பமாகிறது இதனை மனதில் கொண்டு கர்பிணி பெண்கள், கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான ஒரு நிகழ்ச்சி சமுதாய வளைகாப்பு விழா ஆகும். ஒவ்வொரு குடும்பத்திலும் முதல் குழந்தையை வரவேற்கும் முகமாக ‘வளைகாப்பு விழா’ நடத்துவது இயல்பானதாகும். மேலும், கருவில் உள்ள குழந்தைக்கு கேட்கும் திறன் ஆறாம் மாதம் முதலே துவங்கி விடுவதால், தாயின் வளையலோசை கேட்டு, குழந்தையின் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, பாதுகாப்பு உணர்வுடன் நலமாக குழந்தை வளர இவ்விழா உதவி செய்கிறது, இருப்பினும், அரசு அதன் அலுவலர்கள், சமுதாயம் ஆகியவையும் கர்ப்பிணிக்கு உறுதுணையாக இருப்பதை எடுத்துக்காட்டும் முகமாகவும், கர்ப்பகாலத்தில் தாய்மார்களை பராமரித்துக்கொள்ளும் விதம் குறித்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பெறுகிறது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்பகால பராமரிப்பு குறித்த தகவல்கள் கர்ப்பிணி தாய்மார்களை சென்றடைய செய்து, அவர்கள் அதை பின்பற்றுவதை உறுதி செய்தல், கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல், சிசு மரணத்தை குறைத்தல், ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் பிறப்பதை உயர்த்துதல், குழந்தைகளின் பிறப்பு எடை மூன்று(3) கிலோவாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துதல்.


மேலும், கர்ப்பிணி தாய்மார்கள் மயக்கம், தலைவலி, வாந்தி, உடல் வீக்கம் போன்றவைகளை அலட்சியமாக கருதாமல் இரத்த கொதிப்பு மற்றும் இரத்த பரிசோதனை செய்து அதற்கான காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டும், நம் மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கென இலவச அழைப்பு வசதியுடன் கூடிய “வம்சம்” என்ற வழிகாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தின் மூலம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல். மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துதல், குழந்தைகளின் வளர்ச்சி படிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மகப்பேறு உதவி திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தாய்ப்பாலின் அவசியம் மற்றும் நன்மைகள் உணர வைத்தல் ,இணை உணவின் அவசியம் குழந்தைகள் நோய்வாய்ப்படும் போது அளிக்க வேண்டிய கவனிப்புகள் போன்ற பல விவரங்கள் குறித்து அறிந்துகொள்ளலாம். இம்மையத்தின் 94423 74310 என்ற இலவச அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும், இவ்விழாவில் கர்ப்பிணிதாய்மார்களுக்கு மாலை, வளையல்கள் அணிவித்து சந்தனம் குங்குமம் தடவி நலுங்கு வைத்து வெற்றிலை, பாக்கு, பழம் வழங்கி, சுகப்பிரசவம் வேண்டி, ஆரத்தி எடுப்பதுடன் கர்ப்பகால பராமரிப்பு குறித்த கையேடு வழங்கியும், ஐவகை சுவையுடன் மதிய உணவும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விழாவில் சீர்வரிசை வழங்கும் விதமாக வருகை புரியும் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சீர் வரிசை தட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில்மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் எஸ்.சித்ரா , வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் ஜோ.ஜோஸ்பின் அமுதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார்,மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.பொலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

