நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளை வேளாண்மை இயக்குநர் ஏ.அண்ணாதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று ஆய்வு மேற்கொண்டார்
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளை வேளாண்மை இயக்குநர் ஏ.அண்ணாதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று ஆய்வு மேற்கொண்டார்திருக்குவளை வட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மைய கட்டட கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், வேளாண்மை விரிவாக்கம் மையம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினையும, திருவாய்மூர் கிராமத்தில் இயந்திர நடவு மூலம் குறுவை சாகுபடி செய்வதையும், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் குரவப்புலம் ஊராட்சியில் சிவரஞ்சனி எனும் விவசாயி சேகரித்து வைத்துள்ள பாரம்பரிய நெல் விதைகளையும் வேளாண்மை இயக்குநர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் வேளாண்மை இயக்குநர் அவர்கள் தெரிவித்ததாவது நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 17,196 ஹெக்டர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை 4,078 ஹெக்டர் அறுவடை செய்யப்பட்டுள்ளது. சம்பா மற்றும் தாளடி பருவத்தில் சுமார் 65,000 ஹெக்டர் நெல் சாகுபடி செய்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை 39,601 ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா மற்றும் தாளடி பருவத்திற்கு தேவையான நீண்ட கால, மத்திய கால மற்றும் குறுகிய கால நெல் ரகங்கள் 583.91 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டு, 138 மெ.டன் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் நடப்பு பருவத்திற்கு 17,750 மெ.டன் யூரியா, 7,150 மெ.டன் டிஏபி, 4,550 மெ.டன் எம்ஓபி மற்றும் 3,250 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவைப்படுகிறது. இதில் 1,584 மெ.டன் யூரியா, 595 மெ.டன் டிஏபி, 435 மெ.டன் எம்ஓபி மற்றும் 1,155 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது.
நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 735 விவசாயிகள் 1,911 ஏக்கர் பரப்பளவில் பயிர் காப்பீடு செய்துள்ளனர். குறுவை பருவத்திற்கு 93 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 2,710 விவசாயிகளிடமிருந்து 12,741 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக எட்டுக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் 147 மெ.டன்னும், திருக்குவளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் 184 மெ.டன்னும், நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. என வேளாண்மை இயக்குநர் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் ஜா.அகண்டராவ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொ) ஏ.ஜி.இராஜ ராஜன், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் தேதி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.

