மாப்பிள்ளையூரணி கிராம சபை கூட்டத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த பஞ்சாயத் தலைவர் சரவணகுமார்: ஊராட்சி பகுதியில் உள்ள குறைகளை புதிய வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ( 81483 11762)
தெரிவித்தால்
24 மணி நேரத்தில்
நடவடிக்கை எடுக்கப்படும்.!!
தூத்துக்குடி,அக்,3
மாப்பிள்ளையூரணி கிராம சபை கூட்டத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த பஞ்சாயத் தலைவர் சரவணகுமார், மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை புதிய வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ( 81483 11762)
தெரிவித்தால்
24 மணி நேரத்தில்
நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமசபை கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் அதிரடியாக தெரிவித்தார். மேலும் இந்த கூட்டத்தில்
மாப்பிள்ளையூரணி பகுதியில் பாதுகாப்பு நலன் கருதி தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும். எனவும் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட் மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராமசபை கூட்டம் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கொத்தனார் காலணியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பல்வேறு பகுதி பொதுமக்கள் சாலை வசதி குடிநீர் ரேசன் பொருட்கள்
குறைபாடு புதிய டிரான்ஸ்பர்மர், மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேள்விகள் எழுப்பினார்கள். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கவுரை வழங்கினார்கள்.

ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கிராமசபை கூட்டத்தில் பேசுகையில் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 23 சென்ட்இடம் மீட்கப்பட்டுள்ளது. அதில் தண்ணீர்; தொட்டி உள்பட மக்களுக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கவுள்ளோம். ஊராட்சி பகுதியில் பல்வேறு சாலைகள் போடுவதற்காக 111 கிலோ மீட்டர் தூரம் அளவு பணிகள் நடைபெற்றுள்ளது. புதிதாக பல பகுதிகளில் நீர்தேக்க தொட்டி அமைக்கப்படவுள்ளது. பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிதி ஓதுக்கீடுக்காக சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பபட்டுள்ளது. தாளமுத்துநகர் பகுதியில் மாநகராட்சி இடம் என கண்டறியப்பட்டு ஆக்கிரமிப்பு என்று முள்வேலி அமைக்கப்பட்டிருப்பதை நீக்க முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எல்லா பகுதிகளிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை முழுமையாக வார்டு உறுப்பினர்களிடம் அவ்வப்போது கேட்கப்பட்டு அந்த குறைகளை தீர்த்து வைக்க ஊராட்சி நிர்வாகம் முனைப்புடன் செயல்படுகிறது. கடந்த காலத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் வரும் காலங்களில் அதை தடுப்பது சில பகுதிகளில் ஆழமான குழிகள் தோண்டப்பட்டு அதன் மூலம் மோட்டார்கள் வைத்து கடலுக்கு அந்த நீரை கொண்டு சேர்க்கவுள்ளோம். எங்களோடு பொதுமக்களும் ஊராட்சி வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
பின்னர் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் ஊராட்சியின் தனிக்கை அறிக்கை ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த விடுக்க வேண்டிய நடவடிக்கைகள் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் கலைஞர் வீடுவழங்கும் திட்டம் கணக்கெடுப்பு மாப்பிள்ளையூரணி ஊராட்;சி பகுதியில் நடைபெறும் விரும்பதகாத சம்பவங்கள் தடுப்பதற்கும் பொதுமக்கள் நலன் பாதுகாப்புக்கும் தாளமுத்துநகர் காவல்நிலையத்திற்கு கூடுதலாக காவலர்கள் மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் நியமிக்க வேண்டும் உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் குழந்தை வளர்ச்சி திட்ட ஊரகம் அலுவலர் திலகா, மீன்வளத்துறை மேற்பார்வையாளர் சக்திஉடையார், தூத்துக்குடி ஊராட்சி ஓன்றிய மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, வேளாண்மை அலுவலர் ரோஹித்ராஜ், விதைச்சான்று அலுவலர் அபர்ணா, சுகாதா ஆய்வாளர் வில்சன், கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் வினோத், ரேசன்கடை பணியாளர் பிரபாகர், மின்வாரிய பணியாளர் வாசு, ஊரக வளர்ச்சி வாழ்வாதார இயக்க மகளிர்திட்டம் ஓருங்கிணைப்பாளர் அங்காளஈஸ்வரி, மாப்பி;ள்ளையூரணி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலண், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, மகேஸ்வரி காமராஜ், வசந்தகுமாரி, தங்கமாரிமுத்து, சக்திவேல், தங்கபாண்டி, பெலிக்ஸ், சமூக ஆர்வலர்கள் வக்கீல் மாடசாமி, சங்கரன், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, தாளமுத்துநகர் சப்இன்ஸ்பெக்டர்கள் மரிய இருதயம், சதிஷ்குமார், சுடலைமுத்து, மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், தூய மரியன்னை கல்லூரி பேராசிரியர் முனைவர் பரிபூரண செல்வி, தனிப்பிரிவு ஏட்டு முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் அமலநாதன், தூய மரியன்னை கல்லூரியின் சமுதாய மேம்பாட்டு திட்டத்தை சார்ந்த விலங்கியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவிகள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு எம். ஆத்தி முத்து
போலீஸ் செய்தி நியூஸ்

