வேதாரண்யத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகை
வேதாரணியம் அக்டோபர் 2
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்ப வனத்திற்கு அம்மா முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வருகை.
சென்னை அண்ணா பல்கலை கழக பதிவாளர் சிவனேசன் தாயார் இந்திராணி அண்மையில் உடல் நலக்குறைவால் காலமானார். ஆதலால் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் உள்ள அண்ணா பல்கலை கழக பதிவாளர் சிவனேசன் அவர்களின் இல்லத்திற்கு சென்று மறைந்த சிவனேசனின் தாயார் இந்திராணியின் திருவுருவ படத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திறந்து வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.


வேதாரண்யம் நகர அவைத் தலைவர் கணேசன் மனைவி வாசுகி உடல் நலக்குறைவால் நேற்று உயிர் இழந்த நிலையில் அவரது குடும்பத்தினரையும் டி.டி.வி.தினகரன் சந்தித்து ஆறுதல் கூறினார்.அப்போது துணை பொதுச்செயலாளர் ரங்கசாமி மாவட்டச் செயலாளர்கள் காமராஜ் மற்றும் மஞ்சுளா சந்திரமோகன் மாவட்ட அவை தலைவர் கருணை நாதன் நகர கழக செயலாளர் லிங்கேஷ் ஒன்றிய செயலாளர்கள் ஜோதி ராஜேந்திரன், ரமேஷ் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா .

