திருவொற்றியூர் பகுதியில் மூதாட்டியை கொலை செய்த குற்றவாளி ஜெயக்குமார் என்பவரை கைது செய்து, சிறப்பாக பணிபுரிந்த திருவொற்றியூர் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்
சென்னை , திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி , பெ/68 என்பவர் பிப்ரவரி 11ம்தேதி அன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டு , சிகிச்சை பெற்று வந்த நிலையில் 13ம்தேதி அன்று கிருஷ்ணவேணி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட சம்பவம் குறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , சம்பவ இடத்தில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து , மூதாட்டியை தாக்கி கொலை செய்த ஜெயக்குமார் , வ / 33 , எண்ணூர் , என்பவரை பிப்ரவரி 18ம்தேதி அன்று கைது செய்தனர்.அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்



