மலேசியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிக்கு கோல்ட் ஸ்டார் அகாடமி மாணவர்கள் தகுதி – தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன் வாழ்த்தினார்
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில் கோல்ட் ஸ்டார் அகடமி செயல்பட்டு வருகிறது. இங்கு சிலம்பம், யோகா, வில்வித்தை, வால்சண்டை, தடகளம் போன்றவை மாணவர்களுக்கு சிறந்தமுறையில் பயிற்சிவிக்கப்படுகின்றன.
சமீபத்தில் தேசிய அளவிலான சிலம்பு போட்டி திருச்சியில் நடைபெற்றது. இதில் கோல்ட் ஸ்டார் அகாடமி சார்பில் 12 பேர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் 18 தங்கம், 6 வெள்ளி பதக்கங்களை பெற்றனர்.
மேலும், மலேசியாவில் நடைபெற இருக்கும் சர்வதேச போட்டியில் கோல்ட் ஸ்டார் அகாடமி மாணவர்கள் 4 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் 2 பேர் பெண்கள் ஆவார்.
திருச்சியில் நடைபெற்ற போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கும், மலேசியா சர்வதேச போட்டியில் தகுதி பெற்றவர்களுக்கும் பயிற்சியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கினார். மேலும், கோல்ட் ஸ்டார் அகாடமி மாணவர்கள் மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

செய்தி தொகுப்பு: எம்.ஆத்திமுத்து

