நாகப்பட்டினம் மாவட்ட அளவிலான் 11வது வேளாண்மை கணக்கெடுப்பிற்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் செப் 03 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை சார்பில் 11 வது வேளாண்மைக் கணக்கெடுப்பிற்கான மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற 11வது வேளாண்மை கணக்கெடுப்பிற்கான மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பில் இவ்வேளாண்மை கணக்கெடுப்பின் மூலமாக மாவட்டத்தில் உள்ள மொத்த கைப்பற்றுதாரர்களின் நிலையை கண்டறிய முடியும். மேலும் சிறு குறு விவசாயிகள், நடுத்தர மற்றும் பெரும் விவசாயிகளின் எண்ணிக்கையும் கைப்பற்று அளவும் கணக்கிட முடியும். இக்கணக்கெடுப்பின் மூலம் எதிர்காலத்தில் விவசாயிகளுக்கான தேவையும், உரம், கடன், தொழில்நுட்ப பயிற்சி மற்றும் பயன்பாடு குறித்து அரசு திட்டமிட உதவிடும். இக்கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுவதால் நிலத்தின் உரிமையாளர் மற்றும் சாகுபடி விவரம் விடுதலின்றி கணக்கிடப்படும்.
மேலும், வேளாண்மை கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்தும், குறிப்பாக தற்போது இந்தியாவில் முதன் முறையாக இந்த கணக்கெடுப்பானது டிஜிட்டல் முறைப்படி எடுக்கப்படுகிறது. இதனால் கணக்கெடுப்பு துல்லியமாகவும், எளிமையாகவும், விரைவாகவும் சேகரிக்க இயலும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வேளாண்மை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலருமான வி.ஷகிலா புள்ளிஇயல் துணை இயக்குநர் வீ.முத்துக்குமரன் நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர்கள், வேதாரண்யம் நகராட்சி ஆணையர், கோட்ட புள்ளிஇயல் உதவி இயக்குநர் ச.வேல்முருகன் கோட்ட புள்ளிஇயல் உதவி இயக்குநர் நா.பிரேமாவதி, புள்ளிஇயல் அலுவலர்கள் ப.அந்துவன்சேரல் மற்றும் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட் நாகப்பட்டினம், கீழ்வேளுர், திருக்குவளை மற்றும் வேதாரண்யம் வட்டாட்சியர்களும், நாகப்பட்டினம், திருமருகல், கீழ்வேளுர், கீழையூர், தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் வட்டார புள்ளிஇயல் ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர்.எல்விஸ் லாய் மச்சோடாநாகை மாவட்ட செய்தியாளர்.

