நாகப்பட்டினம் மாவட்டம்வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் “உலக தென்னை தினம்” விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் செப்டம்பர் 2 நாகப்பட்டினம் மாவட்டம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் “உலக தென்னை தினம்” விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று 24 வது உலக தென்னை தினம் கொண்டாடப்படுகிறது. தலைஞாயிறு, கீழையூர், வேதாரண்யம் வட்டாரத்தில் 2727 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னையின் அனைத்து பாகங்களும் உபயோகப்படுத்தப்படுகிறது. எனவே தென்னை ஒரு ‘கற்பக விருச்சகம்’ என அழைக்கப்படுகிறது. தென்னையை தனிப்பயிராகவும், வரப்பு பயிராகவும் சாகுபடி செய்யலாம் ஹெக்டேருக்கு 175 மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும்.
தென்னையில் இருந்து கிடைக்கும் இளநீர் ஜீரணமண்டலத்தை வலுப்படுத்த உதவும் தினமும் வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், அதில் இருக்கும் லாரிக் அமிலம், நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, எடை குறைவு பிரச்சினையிலிருந்து விடுபடுதல் போன்ற பலன்கள் கிடைக்கும். தென்னையில் இருந்து கிடைக்கும் எண்ணெய்யானது தலைமுடி ஆரோக்கியத்திற்கு மருத்துவ பொருளாகவும் சமையல் பொருளாகவும் பல பயன்பாடுகளுக்கு உதவுகின்றன.

தேங்காய் மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு சந்தைப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறை மூலம் கிராம ஊராட்சிகளில் தலா ஒரு பண்ணை குடும்பத்திற்கு 3 நெட்டை தென்னங்கன்றுகள் வீதம் 200 பண்ணை குடும்பங்களுக்கு 100 சத மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விழாவில் வேளாண்மை உதவி இயக்குநர் ஜாகுலா அக்கண்டராவ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) வெங்கடேசன் விவசாய பெருமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடாநாகை மாவட்ட செய்தியாளர்.

