வேதாரண்யம் பகுதியில் 17 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
வேதாரணியம் செப்டம்பர் 2
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி அன்று விநாயகர் சதுர்த்தி என இந்துக்களால் கொண்டாடப்படுவது வழக்கம் .கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படாததால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் மட்டும் 99 விநாயகர் சிலைகள் பல பகுதிகளில் வைக்கப்பட்டு தினந்தோறும் பூஜைகள் செய்து பொரி, கடலை, சுண்டல் ஆகிய பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி அன்று பல சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டாலும் நேற்று இரவு இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 12 சிலைகள் உட்பட 17 விநாயகர் சிலைகள் வேதாரண்யம் கடலில் கரைக்கப்பட்டது .



இரவு புறப்பட்ட ஊர்வலம் வேதாரண்யம் பிரதான வீதிகளில் வலம் வந்து சன்னதி கடலில் கரைக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை வேதாரண்யம் காவல் ஆய்வாளர் சுப்ரியா தலைமையிலான காவல்துறையினர் செய்திருந்தனர். இன்னும் வேதாரண்யம் காவல் சரதத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்பது விநாயகர் சிலைகள் பூஜை செய்யப்பட்டு வருகின்றன. இந்த சிலைகள் இன்றும் நாளையும் கரைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த விநாயகர் ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

