நாகப்பட்டினம் காவலர் ஆயுதப்படை மைதானத்தில் தீ விபத்து
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 11
நாகப்பட்டினம் காவலர் ஆயுதப்படை மைதானம் நாகூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த ஆயுதப்படை மைதானத்தில் வழக்குகளுக்காக கைப்பற்றப்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆயுதப்படை மைதானத்தில் இன்று மாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
இதில் மைதானத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எரிந்து
சேதமடைந்தது. உடனடியாக நாகப்பட்டினம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து வெளிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர்
மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

