தமிழக அரசின் சிறந்த மாவட்ட ஆட்சியர் விருதுகள் அறிவிப்பு
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 11 மாற்றுத்திறனாளி நலனுக்காக சிறந்த சேவை புரிந்ததற்காக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தமிழ்நாடு அரசின் சிறந்த மாவட்ட ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாவின்போது தமிழக அரசு சார்பில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கு தொண்டாற்றியதற்காகதமிழக அரசின் சிறந்த மாவட்ட ஆட்சியரின் விருது பெற்ற நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் அவர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
செய்தி தொகுப்பு எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

