வேதாரண்யத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வேதாரணியம் ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட்டமும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தல்.
வேதாரணியம் ஆகஸ்ட் 10
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வேதாரணியம் ஒன்றியம் சார்பில் வேதாரணியம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழக முதல்வரின்பள்ளிகளில்
காலை உணவு திட்டத்தை
உள்ளாட்சி அமைப்புகள் மூலமும் அம்மா உணவகங்கள் மூலமும் வெளியில் சமைத்து பள்ளி சத்துணவு மையங்களில் காலை உணவு வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது என்பதை பரிசீலித்து ஏற்கனவே பள்ளி சத்துணவு திட்டம் நடைமுறைப்படுத்துவது போல அதே பள்ளி சத்துணவு மையங்களில் காலை சிற்றுண்டி சமைத்து வழங்க வழங்க வேண்டும்
என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் அந்தக் கோரிக்கையை தமிழக முதல்வருக்கு சென்றடைய வேதாரணியம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வேதாரணியம் ஒன்றிய தலைவர் வி எஸ் ராமமூர்த்தி தலைமை ஏற்கவும், V.அருள் விழி ஒன்றிய செயலாளர் வரவேற்புரை ஆற்றவும்,
எஸ் தமிழரசி மாவட்ட துணைத்தலைவர், ஏ செல்வராணி மாவட்ட இணைச்செயலாளர், கே துர்காம்பிகா மாநில செயற்குழு உறுப்பினர்
வாழ்த்துரை வழங்கவும்,
கே ராஜீவ் மாவட்ட செயலாளர் கருத்துரை வழங்கவும்
ஆர் உஷா நன்றியுரையாற்றினார்



இறுதியில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

