வேதாரணியம் அடுத்த அண்டர் காடு கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா
வேதாரண்யம் ஆக 09
வேதாரண்யம் அடுத்த அண்டா்காடு கிராமத்தில் அமைந்துள்ளது திரவுபதையம்மன் திருக்கோயில். இந்த கோயில் மிகவும் பழமைவாய்ந்த சிறப்புடைய கோயில். இந்த கோயிலில் ஆண்டு திருவிழா 11.07.2022 கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதிவிழா நேற்று 8 ஆம் தேதி மாலை நடைபெற்றது. முன்னதாக அம்மன் அலங்கரிக்கப்பட்டு பரிவார தேவதைகளுடன் ஊர்வலமாக வந்து தீக்குண்டத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டது. பின்பு விரதம் இருந்த பக்தா்கள் ஒருவர் பின் ஒருவராக தீக்குண்டத்தில் இறங்கி நேர்ததி கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வேதாரண்யம் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் செய்திருந்தனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

