கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலையத்தின் அருகில் பல கிராமங்கள் அமைந்துள்ளன . அதில் உள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கருங்கல் காவல் நிலையத்தில் அமைந்துள்ள கட்டிடத்தில் நூலகம் ஒன்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் இன்று திறந்து வைத்தார்.

இந்த நூலகத்தில் மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக உள்ள புத்தகங்கள் அமைந்துள்ளது எனவும் மாணவர்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவித்தார் . மேலும் அவர் மரக்கன்று நட்டு பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தினார் .
இந்த நிகழ்வில் குளச்சல் உட்கோட்ட காவல் உதவி விஷ்வேஷ் சாஸ்திரி அவர்களும் , கருங்கல் காவல் நிலைய அதிகாரிகளும், காவலர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் .

