இன்று வெள்ளிக்கிழமை மாலை 04.00 தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் கீழவைப்பார் சிப்பிகுளம் மற்றும் கிராமத்தில் உள்ள நாட்டுபடகு மீனவர்கள் மற்றும் வேம்பார் விசைப்படகு மீனவர்கள் இடையில் ஏற்பட்ட பிரச்சனை சம்மந்தமாக சமாதான கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் விளாத்திகுளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் கலந்து கொண்டு கீழவைப்பார் மீனவர்களிடம் பிரச்சனை சம்மந்தமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இக்ககூட்டத்தில் சுமுகமான முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் சமாதான கூட்டத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் திரு. விஜயராகவன், மற்றும் திருமதி. அன்றோ பிரின்ஸி வைலா மற்றும் தருவைகுளம் காவல்நிலைய ஆய்வாளர் திரு. முருகன் மற்றும் தருவைகுளம் கடல் அமலாக்க பிரிவு ஆய்வாளர் திருமதி. ராமலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டார்கள், மேலும் மீனவ சங்க தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், மீனவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்

