காவல் ஆணையாளர் அலுவலகத்தின் உள் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 4K தொழில் நுட்பத்துடன் கூடிய 40 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் இன்று துவக்கி வைத்தார். மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையரக கட்டிட வளாகத்தின் தரைதளத்தில் ஒருங்கிணைந்த வீடியோ பதிவுகள் கண்காணிப்புக்காக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு அறையை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் காவல் அதிகாரிகள் முன்னிலையில் துவக்கி வைத்து கேமராக்களின் இயக்கத்தை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் கமிஷ்னர்கள் இணை கமிஷ்னர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

