• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோரங்களில் புதர் செடிகள், மணல் திட்டுகளை அகற்றும் பணிகள் தீவிரம்::  அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.

policeseithitv by policeseithitv
July 20, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோரங்களில்  புதர் செடிகள்,  மணல் திட்டுகளை அகற்றும் பணிகள் தீவிரம்::   அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோரங்களில்

புதர் செடிகள்,

மணல் திட்டுகளை அகற்றும் பணிகள் தீவிரம்::

அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.

 

தூத்துக்குடி, ஜூலை, 20.

 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் உள்ள தேவையற்ற ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி நகரில் அணைத்து பகுதிகளும் விரிவான சாலைகளை அமைத்து தரும் நோக்கோடும் பொதுமக்களுக்கு நடைபாதைகளாகவும் சீர் செய்து வருகின்றன.

பல சாலைகளில் தேவையற்ற மணல் மேடுகளும் சில பகுதிகளில் முட்புதர் உள்ளிட்ட செடிகள் வளர்ந்த நிலையில் காணப்பட்டன. இதை அப்புறப்படுத்த வேண்டும் என்று பல்வேறு பொதுநல அமைப்புகளும் சில பகுதிகளில் வியாபாரிகள் சங்கத்தினரும் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து மாநகராட்சியால் 15 வது நிதிக்குழு மாணியம் திட்டத்தின் கீழ் புதிதாக வாங்கப்பட்ட ஜேசிபி வாகனம் மூலம் தெற்கு கடற்கரை சாலை பகுதியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக காணப்பட்ட மணல் குவியல்கள் மற்றும் செடிகளை அகற்றும் பணியை சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் ரெக்ஸின், மாநகர திமுக மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், பிரதிநிதி பிரபாகர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் வளர்ந்து வரும் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை முழுமையாக செய்து கொடுக்க வேண்டும். என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்கள். அதனடிப்படையில் 60 வார்டு பகுதிகளிலும் மழைகாலத்திற்கு முன்பு தண்ணீர் தேங்காத வகையில் கால்வாய் புதிதாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

அதே போல் தார்சாலையும் பல பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது பல சாலைகளில் தேங்கியுள்ள மணல்களால் பாதிப்பு ஏற்படுவதாகவும் சாலையும் சுருங்கியுள்ளதாகவும் அதை முழுமையாக அப்புறப்படுத்தி விரிவான சாலையை ஏற்படுத்தி தரவேண்டும். என்று கோரிக்கை வரப்பெற்றதையடுத்து கலெக்டர் பங்களா முதல் தெற்கு கடற்கரை சாலை 3வது மைல் பாலம் முதல் பழைய துறைமுகம் வரை முதற்கட்டமாக சாலையின் இருபுறங்களில் இருக்கும் தேவையற்ற மணல்கள் முட்புதர்கள் செடிகள் அப்புறப்படுத்தி விரிவான சாலையை பொதுமக்கள் வசதிக்கேற்ப செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் மற்ற பகுதிகளிலும் இதுபோன்று முழுமையாக மக்கள் நலன் கருதி அந்தபணிகளை செய்துகொடுக்க உள்ளோம். பாதசாரிகளுக்கு நடந்து செல்வதற்கென்று அமைக்கபப்பட்டுள்ள அந்த வழிதடத்தில் நடந்துசெல்ல வேண்டும். பிரதானசாலைகள் அனைத்தும் போக்குவரத்து இடையூறு இல்லாத மாநகராட்சியை உருவாக்கி கொடுப்பதுதான் எங்களுடயை இலக்கு என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டபணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் ஆய்வு

Next Post

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: பிரதமர் மோடிக்கு தமிழக அரசு அழைப்பிதழ்!!

Next Post
சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: பிரதமர் மோடிக்கு தமிழக அரசு அழைப்பிதழ்!!

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: பிரதமர் மோடிக்கு தமிழக அரசு அழைப்பிதழ்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In