நாகை காடம்பாடி
குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம்: நாகை ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
நாகை, ஜூலை,19
நாகை காடம்பாடியில் குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் காடம்பாடியில் குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பட்டன் குளம் நாகை காடம்பாடியில் புது முகமதியார் தெரு உள்ளது. இந்த தெருவில் ஆயிரத்து 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அம்பட்டன் குளம் உள்ளது. சுமார் 6 ஏக்கரில் இருந்த இந்த குளத்தை பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்தி வந்தனர்.6 ஏக்கரில் இருந்த குளம் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு, 2 ஏக்கராக காணப்படுகிறது.
குளத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன் வராத சூழ்நிலையில்
மேலும் அந்த குளத்தை சுற்றி
ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது
மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இந்த குளத்தில் குப்பைகளை கொட்டுவதால் தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. இதனால் குளத்தில் பொதுமக்கள் குளிக்க முடியாத நிலை உள்ளது. குப்பைகள் கொட்டப்படுவதால் குளத்தில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் குளத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்காவிட்டால் குளம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு எதிர்காலத்தில் குப்பை மேடாக மாற வாய்ப்பு உண்டு என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். இதனால்
குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

