வேதாரண்யத்தை அடுத்த. புஷ்பவனம் கிராமத்தில்
அருள்பாலிக்கும் அருள்மிகு
துரெளபதி அம்மன் ஆலய அக்னி வசந்த பெருவிழா
வேதாரண்யம் ஜூலை 18
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு துரெளபதிதி அம்மன் ஆலய அக்னி வசந்த பெருவிழா
(தீமிதி) சீரும் சிறப்புமாக நடைபெற்றது.இன்று காலை 11 மணிக்கு படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 2 மணி அளவில் காவடி அபிஷேகமும் மாலை ஆறு முப்பதுக்கு
அக்னி வசந்தம்
(தீமிதி பெருவிழா)
சீரும் சிறப்புமாக நடைபெற்றது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் இந்த தீமிதி விழா கொரோனா
காலத்தில் நடைபெறவில்லை .
ஆதலால் இந்த வருடம் ஏராளமான மக்கள் இந்த தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்.



கோயில் நாட்டாண்மை ராமதாஸ் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் இந்த தீமிதி திருவிழாவில் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் மருத்துவத் துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த திருவிழா காலகட்டத்தில் வேதாரண்யம் வட்டம் பஞ்சநதிக்குளம் பாரதக்கதை மணி ஆர் தர்மலிங்கம் பாகவதர் அவர்கள் குழுவினரின் மகாபாரத கதாகாலட்சேபம் தினசரி நடைபெற்றது. இந்த தீமிதி திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்திருந்து
கண்டுகளித்தனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்
மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

