நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் 75 நாட்களுக்கு விலையில்லா மூன்றாவது தவணை தடுப்பூசி போடும் பணி – மாவட்ட ஆட்சியா் அருண் தம்புராஜ் துவக்கி வைப்பு
நாகை ஜூலை 15
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் 75 நாட்களுக்கு விலையில்லா மூன்றாவது தவணை தடுப்பூசி போடும் பணியினை வேளாங்கண்ணி பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், கீழ்வேளுர் எம்.எல்.ஏ நாகை மாலி தொடங்கி வைத்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிவுற்றதை கொண்டாடும் வகையில் ஒன்றிய அரசும் தமிழக அரசும் 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைவருக்கும் மூன்றாவது தவணை முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை 15.7.2022 முதல் 30.9.2022 வரை 75 நாட்களுக்கு விலையில்லா தடுப்பூசியாக செலுத்த முடிவு செய்து 15.7.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் சென்னை எழும்பூரில் துவக்கிவைத்தார்.
கொரோனாநோய் தடுப்பதற்காக தடுப்பூசிகள் 12 வயது முதல் 14 வயது வரையிலும், 15 வயது முதல் 17 வரையிலும், 18 வயது முதல் 59 வயது வரையிலும், 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் என பல கட்டங்களாக போடப்பட்டு வருகின்றது. முதல் தவணை தடுப்பூசி போட்டு 3மாதங்கள் கழித்து இரண்டாவது தவணையும், அதிலிருந்து 9 மாதங்கள் முடிந்து மூன்றாவது தவணையும் போடப்பட்டு வந்தது. தற்போது அரசு இரண்டாவது தவணை தடுப்பூசிக்கும் மூன்றாவது தவணை தடுப்புசிக்கும் உள்ள கால இடைவெளியை 9 மாதத்தில் இருந்து 6 மாதங்களாக (26 வாரங்களாக) குறைத்துள்ளது. இந்த தடுப்பூசியை 13.1.2022 அன்று அதற்கு முன்பும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இன்று 15.7.2022 முதல் மூன்றாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இலக்கு 15.7.2022 முதல் 30.9.2022 வரை 328204 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி மூன்று தவணை தடுப்பூசிகளையும் உரிய காலத்தில் பெற்று தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவா் டயானா சர்மிளா, பேரூராட்சி தாமஸ் ஆல்வாஎடிசன், மாவட்ட கொள்ளை நோய் தடுப்புஅலுவலர் லியாகத்அலி, பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்

