வேதாரண்யம் ஜூலை 14
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் காரை விழுந்ததில் தென்னாடார் ஊராட்சி சேர்ந்த ரேவதி என்பவர் காயம் அடைந்தார் என்ற செய்தி காலையில் நமது போலீஸ் செய்திவெப்-டிவியில் முதலில் வெளியானது.
இதன் எதிரொலியாக உடனடியாக பொது பணித்துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அந்த பிரசவ வார்டில் இருந்தவர்களை வேறு வார்டுக்கு மாற்றி அந்த பிரசவ வார்டில் பழுதுபார்க்கும் வேலை விரைவாக நடந்து வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் துரித நடவடிக்கைகளை கண்டு நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வண்ணம் மருத்துவமனை கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமின்றி மருத்துவமனைக்கு வருவார்கள் என்றும், உயிர் காக்கும் மருத்துவமனை, உயிரை போக்கும் மருத்துவமனையாக இருக்கக் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

