வேதாரண்யத்தில் வேதாரணியம் அரிமா சங்கத்தின் 2022 -23 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா
வேதாரணியம் ஜூலை 12
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் அரிமா சங்கத்தின் 2022 -23 ஆம் ஆண்டில் 40வது ஆண்டு புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா 10.07.2022 ஞாயிற்றுக்கிழமை ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாலை சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டின் புதிய தலைவராக R. பாஸ்கரன்
செயலாளராக D. சுப்பிரமணியன் பொருளாளராக N.சுரேஷ்பாபு மற்றும் பல புதிய பொறுப்பாளர்கள் பணி ஏற்றுக் கொண்டனர். முன்னாள் மாவட்ட ஆளுநர் K. பிரேம் புதிய பொறுப்பாளர்களை பணியேற்பு செய்து வாழ்த்துரை வழங்கினார் .முன்னாள் மாவட்ட ஆளுநர் S. வேதநாயகம் சேவைத் திட்டங்களை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். வேதாரணியம் அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவரும் வேதாரணியம் வர்த்தக சங்கத் தலைவருமான S.S. தென்னரசு சமூக சேவகர்களுக்கு விருதுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள் .சிறப்பு விருந்தினராக வேதாரணியம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் கலந்து கொண்டார்.


விழாவில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன .விழாவில் வேதாரணியம் அரிமா சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடாநாகை மாவட்ட செய்தியாளர் .

