• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்!!  வாக்குச்சாவடி மையங்களுக்கு ஓட்டுப்பெட்டிகள் இன்று அனுப்பப்படுகிறது

policeseithitv by policeseithitv
July 7, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தேனி  தேவாரம் நகரில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் திறப்பு விழா!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

புதுக்கோட்டை மாவட்டத்தில்

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்!!

வாக்குச்சாவடி மையங்களுக்கு ஓட்டுப்பெட்டிகள் இன்று அனுப்பப்படுகிறது

 

புதுக்கோட்டை, ஜூலை, 7

 

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் ஓட்டுப்பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்ட அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை வாக்குப்பதிவு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 7-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவி, அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் வெட்டுக்காடு, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மேலப்பட்டு, அரிமளம் ஊராட்சி ஒன்றியம் நெடுங்குடி, குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம் தென்னங்குடி, புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் தொண்டைமான் ஊரணி ஆகிய 5 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், அரிமளம் ஒன்றியம் செங்கீரை ஊராட்சியில் 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் 20 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுப்பெட்டிகள் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டு முறையில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு மொத்தம் 119 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது. இதில் 54 ஆயிரத்து 777 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவி, தென்னங்குடி, தொண்டைமான் ஊரணி ஆகிய 2 ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தக்கூடிய ஓட்டுப்பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனை சரிபார்க்கும் பணி நேற்று நடைபெற்றது. போலீஸ் பாதுகாப்பு இதேபோல மற்ற ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் பயன்படுத்தக்கூடிய ஓட்டுப்பெட்டிகளும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வேட்பாளர்களின் சின்னம் பொருத்திய வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட்டு வந்துவிட்டன. அவை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த அறைகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குச்சாவடி மையங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) ஓட்டுப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

Previous Post

தேனி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் கேட்பாரற்று கிடக்கும் 504 வாகனங்களை ஏலம் விட முடிவா?

Next Post

புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிம வள கொள்ளையை கண்டித்து தே.மு.தி.க.வினர் நூதன ஆர்ப்பாட்டம்!!

Next Post
தேனி  தேவாரம் நகரில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் திறப்பு விழா!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிம வள கொள்ளையை கண்டித்து தே.மு.தி.க.வினர் நூதன ஆர்ப்பாட்டம்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In