வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
வேதாரணியம் ஜூன் 28
கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கடல்மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டும் ஆண்டுதோறும் இரண்டு முறை தீவிரவாத தடுப்பு ஒத்திகை நடைபெறுகிறது . சாகர் கவாச் எனும் பெயரில் நடைபெறும் இந்த ஒத்திகை நிகழ்வு நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை கடற் பகுதியில் கடலோர காவல் குழும டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் போலீசார் படகு மூலம் சென்று சாகர் கவாச் என்னும் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இன்று காலை 6 மணிக்கு தொடங்கி நாளை மாலை 6 மணி வரை இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது.

இந்த சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை கோடியக்கரை புஷ்பவனம் போன்ற இடங்களிலும் நடைபெறுகிறது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில் வேதாரணியம் கடலோர பாதுகாப்பு குழுமம் ஆய்வாளர் செல்வராஜ் வேதாரணியம் கடற்கரை காவல் நிலைய எஸ் எஸ் ஐ ஆனந்த வடிவேல் மற்றும் கடலோர காவல் துறையினர்
ஈடுபட்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்
.

