வேதாரண்யத்தில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸார் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
வேதாரணியம் ஜூன் 27
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் பேருந்து நிலையம் எதிரில் வருவாய்க் கோட்ட அலுவலகம் முன்பு மத்திய அரசு ராணுவ வீரர்களை சரியாக தேர்வு செய்யாமல் அவர்களது வாழ்க்கையை சீரழிக்கும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. வி. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர காங்கிரஸ் தலைவர் அர்ஜுனன், காங்கிரஸ் வட்டார தலைவர் சங்கமன் கோவிந்தராஜ்,காங்கிரஸ் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் ஆரோ. பால்ராஜ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் புலவர். கணேசன்,
காங்கிரஸ் நகர துணைத்தலைவர் ரபீக், முன்னாள் காங்கிரஸ் நகர தலைவர் வைரவன், காங்கிரஸ் வர்த்தக அணி பொதுச் செயலாளர் ஆப்சி என்கிற அப்துல் உசேன் ,சோட்டா பாய் ,INTUC
உப்பு தொழிலாளர் சங்கத் துணைத் தலைவர் தங்கமணி,
பொருளாளர் தாயுமானவன், பஞ்சநதிக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் மகிளா காங்கிரஸ் தலைவர் சத்யகலா ,
மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராணி, வட்டார மகளிர் அணி தலைவர் மல்லிகா, நகர மகளிர் அணித் தலைவர் ரத்னமாலா,
வேதாரணியம் நகர்மன்ற உறுப்பினர்
தங்கதுரை
மற்றும் அனைத்து காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகளும் காங்கிரஸ் தொண்டர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். இறுதியில் மத்திய அரசின் அக்னிபாத்
திட்டத்திற்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
செய்தி தொகுப்பு : டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .


