கோயம்பேடு பகுதியில் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 2 பெண்களை கைது செய்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவலர்களை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்


சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான தொடர்ச்சியாக, பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன், உதவி ஆய்வாளர்கள் முகுந்தன், முகமது இம்தாதுல்லா, தலைமைக் காவலர்கள் மஞ்சுளா, ஜானகிராமன், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், பிப்ரவரி 06 ம்தேதி அன்று காலை கோயம்பேடு பேருந்து நிற்கும் இடத்தில் உள்ள ஓடுதளப் பகுதியில் கண்காணித்து, விஜயவாடாவில் இருந்து கோயம்பேடு வந்த பேருந்திலிருந்து 2 பெண்களை சந்தேகத்தின்பேரில் விசாரணை செய்து அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்து அதில் பெருமளவு கஞ்சா மறைத்து வைத்திருந்த குமாரி (எ) ராஜகுமாரி, 60, பாரதி குப்பம், கடலூர் மாவட்டம், வெண்ணிலா, 23, பாரதி குப்பம், கடலூர் மாவட்டம் ஆகிய 2 பெண்களை பெண் காவலர்கள் மூலம் கைது செய்து கோயம்பேடு காவல் நிலையம் அழைத்து வந்து அவர்களிடமிருந்து 22 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் பணம் ரூ.2,000/- கைப்பற்றினர்.
கஞ்சா குற்றவாளிகளை கைது செய்து 22 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய மேற்படி காவல் குழுவினரை , சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் இன்று நேரில் அழைத்துப் பாராட்டினார்

