வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஏழுமுனைப் பிரச்சாரத்தை தொடங்கினார்கள்.
வேதாரணியம் ஜூன் 20
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி ஏழுமுனைப் பிரச்சாரத்தை தொடங்கினார்கள்.இந்த ஏழு முனை பிரச்சாரம் நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை கடலூர் விழுப்புரம்
மாவட்டங்களை மையமாகக்கொண்டு ஜூன் 20 முதல் 24 வரை நடைபெறுகிறது.வேதாரண்யத்தில் நடந்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஏழுமுனைபிரச்சாரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜு தலைமை ஏற்க வட்டாரத் தலைவர் ராமமூர்த்தி,மாவட்டச் செயலாளர் அன்பழகன், மாநிலச் செயலாளர் டேனியல் ஜெய்சிங், மாநில துணைத் தலைவர் பெரியசாமி, மாநில பொருளாளர் அந்துவன் சேரன் மற்றும் ஏராளமான தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெறுதல், சத்துணவு ஊழியர்களுக்கு உறுதியளித்தபடி வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குதல், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிவரன்முறை செய்து 41 மாத ஊதிய இழப்பை வழங்கிட வேண்டும்,மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் மற்றும் பல கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ்
லாய்
மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.


