கோவில்பட்டியில் 24 கண்காணிப்பு கேமராக்களை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் வகையில் கோவில்பட்டி பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என டிஎஸ்பி கலைக்கதிரவன் அறிவுறுத்தி வருகிறார். இந்நிலையில், கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள ராம் சரஸ்வதி நகரில் குடியிருப்போர் சங்கம் சார்பில் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா கோவில்பட்டி டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராவை இயக்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கண்காணிப்பு அறையையும் திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அய்யப்பன், டாக்டர் பிரபு, போலீசார், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

