ராகுல்காந்தி மீது பொய்யான குற்றச்சாட்டு பதிவு செய்த
மத்திய அமலாக்கத்துறையை கண்டித்து தூத்துக்குடி தெற்கு, வடக்கு,மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
தூத்துக்குடி ஜூன் 17
தூத்துக்குடியில் மத்திய அமலாக்கத்துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராகுல்காந்தி மீது பொய்யான குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணைக்கு அழைத்த ஒன்றிய அரசின் அமலாக்கதுறையை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்டம், வடக்கு மாவட்டம், மாநகர் மாவட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் சார்பில் நடைபெற்று வந்த நிலையில். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் ஆகியோர் தலைமையில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி வருமானவரி அலுவலகம் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எமுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி, டேனியல் ராஜ், ஏ பி சி சண்முகம், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடிண்டா, கற்பககனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சங்கர்,
ஜஎன்டியுசி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ், மாநில செயலாளர் சுடலை, மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா, சேகர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சகாயராஜ்,வடக்கு மாவட்ட தலைவர் ராகுல்,மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நடேஷ்குமார், மாநகர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் பீரவீன்துரை, ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முத்துமணி, அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் ராஜன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலெட்சுமி, மாவட்ட சேவாதளம் பிரிவு தலைவர் ராஜா, மாவட்ட நிர்வாகிகள் கோபால், சேவியர் மிஷியர், குமாரமுருகேசன், அபுதாங்கீர், மைக்கேல், சின்னகாளை, நீர்மல் கிறிஸ்டோபர், பிரபாகர், கனியம்மாள், பாக்கியராஜ், ஜஎன்டியுசி ராஜா, சாந்தி, வால்டர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


