பொற்கொல்லர்களை இழிவாக பேசிய தனியார் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க விஸ்வ தமிழ் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யிடம் புகார் மனு
தூத்துக்குடி. ஜூன்.17.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஸ்வ தமிழ் கழகம் சார்பாக 16.06.2022 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது.
கடந்த 9.6.2022 அன்று இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் டிவி சீரியல் ஒளிபரப்பானது. இதில் பொற்கொல்லர்களை இழிவாக பேசிய காட்சிகள் இடம்பெற்றது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான பொற்கொல்லர்கள் தமிழகம் முழுவதும் தங்கள் எதிப்பை தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில், தூத்துக்குடியில் நேற்று தனியார் தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீதும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது.
இதில் விஸ்வ தமிழ் கழக மாநில பொதுச்செயலாளர் சிந்தனை சிற்பி ????.????. சிவன் விஸ்வகர்மா தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. அவருடன் தூத்துக்குடி மாவட்ட தலைவர் கண்ணன் ஆச்சாரியார் செக்காரகுடியை சார்ந்த சுடலைமணி ஆச்சாரியார் மாவட்ட துணை செயலாளர் சங்கர் ஆச்சாரியார் மாடசாமி ஆச்சாரியார் சந்தனராஜ் ஆச்சாரியார் மாரியப்பன் ஆச்சாரியார் கணேசன் ஆகியோர் கழக பொதுசெயலாளர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடமும் புகார் மனு கொடுக்க ப்பட்டது அவர்கள் மனுவை பெற்றுக்கொண்டு துரிதமான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
செய்தி தொகுப்பு: சுடலைமணி, செக்காரக்குடி


