நாகை அடுத்த கீழ்வேளுர் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு
நாகை ஜூன் 16
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம், ஆனைமங்கலம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.62 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணியினையும், ரூ.28.94 லட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டுமான பணிகளையும், எரவாஞ்சேரி ஊராட்சியில் ரூ.11.62 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணியினையும், பட்டமங்கலம் ஊராட்சியில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்காடி கட்டும் பணியினையும், 75 அனக்குடி ஊராட்சியில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்காடி கட்டும் பணியினையும், ரூ.11.62 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, வெண்மணி ஊராட்சியில் ரூ.11.62 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணியினையும், 30 ஆயிரம் கொள்ளளவுள்ள தண்ணீர் தொட்டி அமைக்கப்படும் பணிகளையும், ஆந்தகுடி ஊராட்சியில் ரூ.11.62 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணியினையும், சிகார் ஊராட்சியில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்காடி கட்டும் பணியினையும், சிகார் ஊராட்சியில் ரூ.28.94 லட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டுமான பணிகளையும், கூரத்தாங்குடி ஊராட்சியில் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியினையும், கொடியாலத்துர் ஊராட்சியில் ரூ.28.94 லட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டுமான பணிகளையும், ஒக்கூர் ஊராட்சி கடம்பன்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
முன்னதாக, குருக்கத்தி ஊராட்சியில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் 160மீ தூரம் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதையும், பட்டமங்கலம் ஊராட்சியில் உள்ள நியாய விலை கடை பார்வையிட்டு அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும், எரவாஞ்சேரி, பட்டமங்கலம், வெண்மணி,சிகார் ஆகிய ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகட்டப்பட்டு வரும் வீடு கட்டும் கட்டுமான பணிகளையும், அத்திபுலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற குறுவட்ட அளவில் முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது கீழ்வேளுர் வட்டார வளர்ச்சி அலுவலர் தியகராஜன், ராஜகோபால், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றிய பொறியாளர்கள் ரவிச்சந்திரன், பாலசந்தர், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்


