தேசிய சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு
மாப்பிள்ளையூரணியில் கனிமொழி எம்.பி மரக்கன்று நட்டினார்.
தூத்துக்குடி, ஜூன், 8
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் மக்களவை குழு துணைத்தலைவரும் மாநில மகளிர் அணி செயலாளருமான கனிமொழி எம்.பி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் ஓட்டப்பிடராம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் காடுவளர்ப்பு தோட்டம் அமைக்கப்பட்டு பாராமரிக்கப்பட்டு வருகிறது.
அதனை கனிமொழி எம்பி ஆய்வு மேற்கொண்டு தேசிய சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நட்டினார் மாப்பிள்ளையூரணியில் நடைபெறுகின்ற பணிகள் நடைபெறவுள்ள பணிகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமாரிடம் கனிமொழி எம்பி கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ, ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா, தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜ், ஊராட்சி அலுவலர் ராமராஜ், மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவிபொறியாளர் சரவணன், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, மகேஸ்வரி காமராஜ், தங்கமாரிமுத்து, சக்திவேல், கிளைச்செயலாளர் மாரியப்பன், மற்றும் கௌதம், ஊராட்சி மன்ற செயலாளர் ஜெயக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீர பாண்டியன், உள்பட பல்வேறு துறைச்சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தி தொகுப்பு
ஆத்திமுத்து

