வேதாரண்யத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.
வேதாரண்யம் ஜூன் 3
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது.முதலில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.இதில் வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ. புகழேந்தி அவர்கள் மரக்கன்றுகளை நட்டு இந்த விழாவினை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் வனசரக அலுவலர் அயூப்கான்,நகர்மன்றத் துணைத் தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள்,அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இதைத்தொடர்ந்து வேதாரணியம் மேலவீதியில் உள்ள திமுக அலுவலகத்தில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது இதில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.



இதைத் தொடர்ந்து வேதாரணியம் ராஜாஜி பூங்காவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக நகரங்களின் தூய்மை மக்கள் இயக்கம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த பேரணி துவங்குவதற்கு முன் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் விழிப்புணர்வு உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்தப் பேரணியை வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ. புகழேந்தி அவர்கள் துவக்கி வைத்தார்.இந்தப் பேரணியில் நகர்மன்றத் துணைத் தலைவர் மற்றும் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும், நகராட்சி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.இந்தப் பேரணி ராஜாஜி பூங்காவிலிருந்து வேதாரணியம் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

