வேதாரண்யத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்காததை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
வேதாரணியம் மே 23
நாகை மாவட்டம் வேதாரண்யம் கீழ வீதியில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்காத தமிழக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் எம்எல்ஏ தலைமையில் டிராக்டர் உடன் அதிமுகவினர் விவசாயிகள் 300க்கும் மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் டிராக்டர்களில் வந்தனர்
அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு அருகே டிராக்டர்களை நிறுத்தி வைக்க அனுமதிக்கப்பட்டது.இந்த கண்டனஆர்ப்பாட்டத்தில் கிழக்கு ஓன்றிய கழக செயலாளர் கிரிதரன் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சுப்பையன் வேதாரணியம் நகரச் செயலாளர் வக்கீல்
நமச்சிவாயம்
மாவட்ட பொருளாளர் சண்முகராசு
விவசாய சங்கத் தலைவர் ஆதனூர் சுப்பிரமணியன் தாணிக்கோட்டகம் ரவிச்சந்திரன்
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திலீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் வேதாரணியம் சட்டமன்ற உறுப்பினர் பேசும்போது எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் கழக அரசு ஆணை எண் 50 வண்டல் மண் எடுக்க அனுமதி தந்தது ஆனால் தற்போது அதை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்தும்
வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கக் கோரியும் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுகவினர், விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

