தூத்துக்குடியிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 14 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியிலிருந்து கேரளாவிற்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் வந்துள்ள நிலையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தற்போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வழங்கும் இலவச அரிசி பல குடும்ப அட்டைதாரர்கள் வாங்காததால் அதனை பிரபல அரிசி கடத்தல் கும்பல்கள் மூலம் பல்வேறு ரேஷன் கடைகளில் இருந்து அரிசியை சேகரித்து குடோன்களில் பதுக்கி வைக்கப் படுவதும் பின்னர் இரவு நேரங்களில் லாரி வேன் மூலம் கேரளாவிற்கு கடத்துவதும் தொடர்கதையாக இருந்து வந்த நிலையில் அதனை தடுக்கும் விதமாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு புதிய காவல் ஆய்வாளராக தில்லை நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார் இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தார் அந்த சமயம் தூத்துக்குடியிலிருந்து வெளிமாநிலங்களுக்கு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி கும்பல்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கும் முக்கிய புள்ளிகளை கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
அந்த சமயத்தில் தூத்துக்குடியிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டது அதனால் தற்போது ஆய்வாளராக இருக்கும் தில்லை நாகராஜன் அவர்களை
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார் இவர் நியமிக்கப்பட்டு மூன்று மாதத்தில் பல்வேறு அரசி கடத்தல் கும்பல்களை கைது செய்து இருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியிலிருந்து. 14 டன் ரேஷன் அரிசி கேரளாவிற்கு லாரி மூலம் கடத்த இருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் தில்லை நாகராஜன் அவர்களுக்கு தகவல் கிடைக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முறப்பநாடு ஆய்வாளர் பாஸ்கரன் உதவியோடு கேரளாவிற்கு கடத்த முயன்ற 14 டன் அரிசியை முறப்பநாடு பகுதியில் வைத்து பறிமுதல் செய்தனர் மேலும் கடத்த முயன்ற லாரியை பறிமுதல் செய்தனர்.
ரேஷன் அரிசி கடத்த முயன்ற வல்லநாடு பகுதியைச் சார்ந்தவர் ஒருவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த ஒருவர் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் .லாரி உரிமையாளரை குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
நேற்று முன்தினம் தூத்துக்குடி டவுன் பகுதியில் 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் தொடர் அதிரடி நடவடிக்கையாக ரேஷன் அரிசி கடத்தல் கும்பல்கள் கைது செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ரேஷன் அரிசி பதுக்கி வைக்கும் முக்கிய புள்ளிகள் தற்போது தலைமறைவாகி வருவதாக காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி மற்றும் டிஎஸ்பி ஆகியோரின் ஆலோசனையின் பெயரில் தூத்துக்குடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன் ரகசியமாக கடத்தல் புள்ளிகளை கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் தூத்துக்குடியில் ரேஷன் கடைகளில் இருந்து அரிசி கடத்தப்படுவதாக பொதுமக்கள் பார்த்தாள் எந்த நேரத்திலும் தனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தால் அரிசி கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை பாயும் என காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன் தெரிவித்தார் தூத்துக்குடியில் ரேஷன் கடத்தல் கும்பல்கள் மீது தொடர் நடவடிக்கை பாய வேண்டுமெனவும் கடத்தலுக்கு உறுதுணையாக இருக்கும் ரேஷன் கடை ஊழியர்கள் மீதும் கடும் நடவடிக்கை பாயும் என சிவில் சப்ளை அதிகாரிகள் எச்சரிக்கை வேண்டுமெனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் அதிரடி நடவடிக்கைக்கு ராயல் சல்யூட்
போலீஸ் செய்தி இணையதள தொலைக்காட்சிக்காக
செய்தியாசிரியர்
ஆத்திமுத்து
