2024 மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும் திமுக வெல்லும்..கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அடித்து சொல்லும் உதயநிதி ஸ்டாலின்..
ஓசூர், மே, 23
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஓசூர் பகுதியில் நடைபெற்ற பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
காலை 9 மணிக்கு ஓசூர் சீதாராம் மேட்டில் தி.மு.க. கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தொடர்ந்து பவானி பேலசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 600 முதியவர்களுக்கு பொற்கிழி வழங்கினார்.
அதைத்தொடர்ந்து ஓசூர் மீரா மஹாலில் மாற்றுக்கட்சியினர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து ஓசூர் வரம் மருத்துவமனையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
அதைத்தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மெகா தனியார் வேலை வாய்ப்பு முகாமில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து தேன்கனிக்கோட்டை மல்லிகை பார்ம் ஹவுசில் நடைபெற்ற தளி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி மற்றும் ஓசூர் மாநகராட்சி உறுப்பினரும், பொது சுகாதார குழு தலைவருமான என்.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்றார். பின்னர் மாலையில் சூளகிரியில் கட்சி கொடியேற்று விழா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ
வருகிற 2024 மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும் திமுக வெல்லும்..
என
அடித்து சொன்னார் உதயநிதி ஸ்டாலின்.. இந்தப் பேச்சு திமுக தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரையும் உற்சாகப்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
. நேற்று காலை முதல் மாலை வரை தொடர் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தார். உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் அமைச்சர்கள் காந்தி, கணேசன், சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தளி வடக்கு ஒன்றிய செயலாளரும் தனி ஒன்றிய குழு தலைவருமான சீனிவாசலு ரெட்டி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் உடன் இணைந்து சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்படுத்தினார்.

