நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் காங்கிரஸ் கட்சியினர் அறவழிப் போராட்டம்
வேதாரணியம் மே 19
முன்னாள் பாரத பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களை படுகொலை செய்த குற்றவாளி பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து நாகை மாவட்டம் வேதாரண்யம் பேருந்து நிலையம் எதிரே இந்திய தேசிய காங்கிரஸார் வாயில் வெள்ளைத் துணியால் கட்டி அற வழியில் போராட்டம் நடத்தினர். இதில் நகர காங்கிரஸ் தலைவர் வைரவன்,நகர துணைத் தலைவர் அர்ஜுனன், வட்டாரத் தலைவர் ஜெகநாதன்,ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் பால்ராஜ்,காங்கிரஸ் வர்த்தக அணி மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் உசேன், காங்கிரஸ் சிறுபான்மை அணி மாவட்ட துணைத்தலைவர் ரபீக், INTUC உப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் துணைத் தலைவர் தங்கமணி பொருளாளர் தாயுமானவன், மகிளா காங்கிரஸ் நகர தலைவர் ரத்னமாலா,மகளிரணிசார்பில் தமயந்தி, மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்
மச்சோடா மற்றும் நாகை மாவட்ட செய்தியாளர்.

