32வது சாலை பாதுகாப்பு மாத விழா 20 வது நாள் நிகழ்ச்சியாக நேற்று
திருச்சிராப்பள்ளி மாநகர காவல்துறை காவேரி மருத்துவமனையுடன் இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் தனியார் வேன் ஓட்டூநர்களுக்கான சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள போக்குவரத்து பூங்காவில் நடைப்பெற்றது.

இவ்விழாவை திருச்சி மாநகர போலீஸ் கமிஷ்னர் லோகநாதன் சாலைப்பாதுகாப்புகுறித்த அறிவுரைகள் வழங்கி மருத்துவ முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.இம்மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்டவாகன ஓட்டுநர்களுக்க மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உரியமருத்துவஆலோசனைமற்றும் மருந்துகள்வழங்கப்பட்டது.


மேற்படிமருத்துவவிழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாமில் திருச்சி மாநகரம் குற்றம் மற்றும்
போக்குவரத்து பிரிவு துணை கமிஷ்னர் வேதரத்தினம்,காவேரி மருத்துவர்கள்
மருத்துவ பணியாளர்கள், திருச்சி மாநகர உதவி கமிஷ்னர்கள்
காவல் ஆய்வாளர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள்.மருத்துவபரிசனை
செய்து கொண்ட வாகன ஓட்டுநர்கள் மருத்துவ முகாம் மிகவும் பயனுள்ளதாக
இருந்ததாக தெரிவித்தனர் மருத்துவ முகாமை இணைந்து நடத்திய காவேரி
மருத்துவமனை நிர்வாகத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டனர்

