நாகை நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை – அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைப்பு
நாகை மே 2
நாகப்பட்டினம் நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜையினை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கிவைத்தார். மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், எம்.எல்.ஏக்கள் நாகை முகமதுஷா நவாஸ், கீழ்வேளுர் நாகைமாலி, நகர மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாகப்பட்டினம் நகராட்சியில் நமக்கு நாமே திட்டம் 2021-2022க்கான ஏ.டி.எம் மகளிர் கல்லூரி மூலம் ரூ.5 இலட்சம், நமக்கு நாமே திட்ட அரசு நிதியின் மூலம் ரூ.5 இலட்சம் என மொத்தம் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் ஏ.டி.எம் மகளிர் கல்லூரி; சாலையை தார்சாலையாக அமைத்து சிறுபாலம் கட்டுவதற்கான பூமிபூஜையினையும், நாகப்பட்டினம் நகராட்சியில் தாமரைக்குளத்தில் (வடக்கு மற்றும் தென்புறம் எஞ்சியபகுதியில்) நடைபாதைபேவர் பிளாக் அமைத்து எவர் சில்வர் பாதுகாப்பு கைப்பிடி அமைக்கும் பணி 15வது மத்திய நிதி ஆணையத்தின் மான்ய நிதி(2020-2021) ரூ.48 இலட்சம் மதிப்பீட்டில் பணிதுவங்குவதற்கான பூமிபூஜையினையும் மற்றும் நம்பியார் நகரின் வடக்கு பகுதியில் சுமார் 600மீ தூரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டு, மீனவர்களின் குடியிருப்பு பகுதிக்கு ஆபத்து ஏற்பட்டது. மீனவர்களின் கோரிக்கையின் படி கடல் அரிப்பை தடுக்கும் பொருட்டு, இந்திய தொழில் நுட்ப நிறுவனம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சிறிய நேர்கல் சுவர்கள் 4 எண்ணம் வடிவமைப்பு வழங்கப்பட்டு ஒவ்வொரு நேர்கல் சுவரும் 150மீ இடைவெளியில் நபார்டு நிதி பெறப்பட்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான பூமிபூஜையினை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்.


முன்னதாக, நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் திருமருகல் வட்டார அளவிலான தனியார் வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு இந்த பயிற்சி முகாமில் கலந்துக் கொண்டு தேர்வு செய்யப்பட்ட ஆண்கள், பெண்கள் என 120 நபர்களுக்கு பணி நியமன ஆணையினையும், சுய தொழில் செய்வது குறித்த பயிற்சியில் பயிற்சி பெற்ற 30 பெண்களுக்கு சான்றிதழினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், நகராட்சி பொறியாளர் ஜெயகிருஷ்ணன், மகளிர் திட்ட உதவி அலுவலர் பாலன், நகராட்சி துணைத்தலைவர் செந்தில் குமார், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

